மண்ணச்சநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கூறி மு.பரஞ்ஜோதி வாக்கு சேகரிப்பு


மண்ணச்சநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கூறி மு.பரஞ்ஜோதி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 3:49 PM IST (Updated: 30 March 2021 3:49 PM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கூறி மு.பரஞ்ஜோதி வாக்கு சேகரித்தார்.

மண்ணச்சநல்லூர், 

பெண்களுக்கு நலத்திட்டங்களை வாரி வழங்கும் அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களி யுங்கள் என்று பரஞ்ஜோதி வேண்டுகோள் விடுத்தார்.
மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி நேற்று தத்தமங்கலம், தேவி மங்கலம், அக்கரைப்பட்டி, வடக்கு சிறுபத்தூர், தெற்கு சிறுபத்தூர், கீழப்பட்டி, ஓமாந்தூர் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். 

அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலைகள் அணிவித்தும், சால்வை அணி வித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். வாக்கு சேகரிப்பின்போது பரஞ்ஜோதி பொதுமக்களிடம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டை உள்ள பெண்கள் அனைவருக் கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும். வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 

பெண்களின் பணிச்சுமையை குறைக்க அவர்களுக்கு அம்மா வாஷிங் மிஷின் வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இதுமட்டு மல்லாமல் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றும் அறிவிப்புகள் வாக்குறுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டு மென்றால் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின்போது அவருடன் அ.தி.மு.க. ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளான அளவில் சென்றனர்.

Next Story