துறையூர் தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் - தி.மு.க.வேட்பாளர் ஸ்டாலின்குமார் உறுதி


துறையூர் தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் - தி.மு.க.வேட்பாளர் ஸ்டாலின்குமார் உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 3:54 PM IST (Updated: 30 March 2021 3:54 PM IST)
t-max-icont-min-icon

துறையூர் தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என தி.மு.க.வேட்பாளர் ஸ்டாலின்குமார் உறுதி அளித்தார்.

துறையூர், 

துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் நேற்று காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், ஜீவாநகர், காளியம்பட்டி, பகளவாடி, ஆதனூர், கண்ணனூர், கண்ணனூர் பாளையம், புதூர்பட்டி,, மீனாட்சிபட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசும்போது, 

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். துறையூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி உள்ளேன். புறநோயாளிகள் காத்திருப்போர் அறை, அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர், துறையூரில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உண்டு உறைவிட மாணவிகள் தங்கும் விடுதி, கிராமப்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். மீண்டும் நான் உங்களில் ஒருவராக பணியாற்ற காத்திருக்கிறேன். 

எனவே எனக்கு மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். மேலும் பல திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறேன் என்றார். அப்போது, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, இளைஞரணி அமைப்பாளர் கிட்டப்பா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், ஆதிதிராவிடர் நலக்குழு மகாலிங்கம், மாவட்ட வர்த்தக அணி திருமூர்த்தி, முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ராஜேஸ்வரிசேகர், சுதா செங்குட்டுவன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் உடன் சென்றனர். பிரசாரத்தின் போது,  துறையூரை அடுத்த காளிப்பட்டியில் ஸ்டாலின் குமாருக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

Next Story