நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்


நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 March 2021 6:22 PM IST (Updated: 30 March 2021 6:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பழனி:

கொரோனா விதிமுறைகள்

பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று காலை நடந்தது. 

இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது.

 இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. 

 படக்குழுவினருக்கு அபராதம்

குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முக கவசம் அணியாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு சுகாதாரத்துறையினர் ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

கடந்த மாதம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
--------

Next Story