மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்


மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 6:45 PM IST (Updated: 30 March 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி அருகே மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள பெரியகுளம், நரசிங்கபுரம் குட்டையாகுளம் மற்றும் சிறுமலை அடிவாரத்தில் உள்ள சில குளங்களில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். 

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அப்பகுதி மக்கள் புகார் கூறினர். அதன்பேரில் தனிப்படை போலீசார் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் நேற்று ரோந்து சென்றனர். 

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 

விசாரணையில் லாரிகளின் டிரைவர், சக்கையநாயக்கனூரை சேர்ந்த ராஜா (வயது 33), காமன்பட்டியை சேர்ந்த காளிமுத்து (32) என்றும், அந்த லாரிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதும் தெரியவந்தது. 

இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களை கைது செய்தனர். 

Next Story