கவுண்டம்பாளையம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அமைப்பேன்- திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி


கவுண்டம்பாளையம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அமைப்பேன்- திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
x
தினத்தந்தி 31 March 2021 12:00 AM IST (Updated: 30 March 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், கவுண்டம்பாளையம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அமைப்பேன் என திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி அளித்தார்.

சரவணம்பட்டி, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட இடிகரை பேரூராட்சி மற்றும் அத்திப்பாளையம் ஊராட்சி மற்றும்  சரவணம்பட்டி பகுதி 27 மற்றும் 42 வது வார்டுகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது, 

தி.மு.க ஆட்சி அமைந்த உடன், என்னை வெற்றி பெறச் செய்தவுடன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன், தொகுதி முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன், மேலும் வீட்டுமனை பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண்பேன், கவுண்டம்பாளையம் பகுதியில் கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். தார்சாலை, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன், கவுண்டம்பாளையம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். 

இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் டி.பி.சுப்பிரமணியம், ராமமூர்த்தி, தங்கவேலு, தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மணி (எ) விஜயகுமார், சுப்பையன், பொன்னுசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் ஜனார்த்தனன், சுரேந்திரன் மற்றும் சாந்தாமணி, அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், சுரேஷ்குமார், சிவா (எ) பழனிச்சாமி, பா.தோ.ராசு (எ) பழனிச்சாமி, மகாலிங்கம், வட்ட கழக பொறுப்பாளர்கள் ரங்கசாமி, சிவக்குமார், கந்தசாமி, ராஜ்குமார், அக்சயா கணேசன், விவேகானந்தன், வைரமுத்து, சின்னமேட்டுப்பாளையம் சம்பத், சின்னசாமி, கதிரவன், வெள்ளமடை பழனிச்சாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் பழனிச்சாமி, சிவக்குமார், சக்திவேல், பிரபு, கிருஷ்ணசாமி மற்றும் ம.தி.மு.க பகுதி செயலாளர் விஸ்வராஜ், ஒன்றிய செயலாளர் பாலகுருசாமி, ராம்கி, மகாத்மா காந்தி மற்றும்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர் சுதாகர், முத்துச்சாமி, தீபன்குமார், பரமேஸ்வரன், பழனிச்சாமி, தனுஷ்கோடி மற்றும் சி.பி.எம் கட்சி சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் சி.பி.ஐ கட்சி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், கோபால் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story