கிணத்துகடவு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிராபாகரனை ஆதரித்து தயாநிதிமாறன் பிரச்சாரம்
கிணத்துகடவு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து தயாநிதிமாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
கிணத்துகடவு,
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழக மக்களின் உரிமைகள் மீட்கப்படும். பொதுமக்களின் கவலைகள் தீர நமது ஒட்டுமொத்த வேட்பாளர்களும் வெற்றிபெறவேண்டும். எப்போதெல்லாம் சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கின்றனரோ அப்போதெல்லாம் ஸ்டாலின் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருப்பார். இஸ்லாமியர்களால் தான் கொரான பரவியதாக கூறியபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தி.மு.க தான். கொரானா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் கொடுக்க சொன்னவர் ஸ்டாலின் தான். ஆனால் அதை அ.தி.மு.க அரசு செய்யவில்லை.தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் ரூ.4000 கலைஞர் பிறந்த நாளுக்கு வழங்கப்படும். எரிவாயு சிலின்டருக்கு மாணியமாக ரூ100 வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். எனவே கிணத்துகடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக கிணத்துகடவு தொகுதி தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நாச்சிபாளையம் மாவுதம்பதி பிச்சனூர் ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். கிணத்துகடவு காய்கறி மார்கெட்டில் வியாபாரிகளிடம் வாக்குசேகரித்தர்ர். அப்போது கிணத்துகடவில் தக்காளி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிர்பான கிடங்கு அமைத்து தரப்படும். தக்காளியை மதிப்புகூட்டு பொருளாக விற்பனை செய்யும் தொழிற்சாலை அமைத்து தரப்படும்.
எனஉறுதியளித்தார் தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் வித்தியாசமான முறையில் முரசு கொட்டி வாக்குசேகரித்தார்.
அப்போது அவர் அ.தி.மு.க ஆட்சியில் நடுத்தர வர்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பவேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். ஆகவே அனைவரும் மறவாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story