7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 3:39 PM GMT (Updated: 30 March 2021 3:39 PM GMT)

7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 550 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 375 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 38 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 137 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story