தேர்தல் அலுவலரை மாற்றக்கோரி செஞ்சியில் பா.ம.க. வேட்பாளர் சாலை மறியல்
செஞ்சியில் பா.ம.க. வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் உதவி தேர்தல் அலுவலராக மேல்மலையனூர் தாசில்தார் மெகருன்னிசா உள்ளார். இவர் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்று கூறி மாவட்ட கலெக்டரிடம் செஞ்சி தொகுதி பா.ம.க. வேட்பாளர் ராஜேந்திரன் புகார் அளித்து இருந்தார்.
ஆனால், இவரது புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை பா.ம.க. வேட்பாளர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான பா.ம.க.வினர் செஞ்சி கூட்டு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உடன்படவில்லை.
தொடர்ந்து, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தாசில்தார் ராஜன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தேர்தல் அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியதன் பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story