திண்டிவனத்தில் லாரி மோதி தொழிலாளி சாவு


திண்டிவனத்தில் லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 30 March 2021 10:33 PM IST (Updated: 30 March 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் லாரி மோதி தொழிலாளி உயிாிழந்தாா்.

திண்டிவனம்,

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் குணசேகரன் (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென் பசாரில் நடந்த உறவினர் இல்ல விழாவில் பங்கேற்க வந்தார். 

பின்னர், குடும்பத்தினரை உறவினருடன் வேனில் அனுப்பி வைத்துவிட்டு, குணசேகரன் மட்டும் தென்பசாரில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, திண்டிவனம் நத்தமேடு அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த குணசேகரன் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது.

 இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குணசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story