தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தது. அன்றாட பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 291 ஆக அதிகரித்தது.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 31 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story