ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 10:54 PM IST (Updated: 30 March 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

ஆதனக்கோட்டை, மார்ச்.31-
ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனையடுத்து பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் 9-ம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சந்தனம், விபூதி, பன்னீர், தேன், தயிர், பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று அம்பாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமி அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூைஜக்கு பிறகு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டு்ம் நிலையைவந்தடைந்தது. அதன்பிறகு மண்டகப்படி தாரர்கள் கிடாய் வெட்டி அம்மனுக்கு பலியிட்டனர். பின்னர் காப்பு களையப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெற்றது. விழாவில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story