கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி


கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 30 March 2021 11:00 PM IST (Updated: 30 March 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி மீட்கப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி மீட்கப்பட்டார்.

தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று மதியம் 1 மணி அளவில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடினார்கள்.
பின்னர் தீக்குளிக்க முயன்றவர் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றினர். அதன்பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி ஆசுவாசுப்படுத்தினார்கள்.

சொத்து தகராறு

இது குறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சண்முகசிவா(வயது 55). விவசாயி. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களுக்கும் இடையே 17 ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்து உள்ளது. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து சிவகங்கை நகர் போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் சண்முகசிவா தீக்குளிக்க முயன்றதற்கு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story