மேட்டுப்பாளையம் கல்லாறு பாலம் அருகே வீட்டின் மீது 2 லாரிகள் விழுந்தன. இதில், 7 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மேட்டுப்பாளையம் கல்லாறு பாலம் அருகே வீட்டின் மீது 2 லாரிகள் விழுந்தன. இதில், 7 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு தூரிப் பாலம் அருகே ஊட்டி செல்வதற்காக பிஸ்கட் பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில், ஊட்டி கக்குச்சி அஞ்சல் பகுதியை சேர்ந்த டிரைவர் தேவராஜ் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி காபித்தூள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று அதிகாலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை செல்வராஜ் ஓட்டி வந்தார்.
அதில் அவரின் மனைவி, மகள் உள்பட குடும்பத்தினரும் இருந்தனர். இந்த நிலையில் லாரியின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததை லாரி தாறுமாறாக ஓடி, கல்லாறு துரிப்பாலம் அருகே நின்று கொண்டு இருந்த லாரி மீது வேகமாக மோதியது.
வீட்டின் மேல் விழுந்தது
இதையடுத்து அந்த 2 லாரிகளும் தூரிப் பாலம் அருகே கீழே இருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மேல் விழுந்தது.
இதில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாந்தாமணி (வயது 70), அவருடைய பேரன் ரஞ்சித் குமார் (16) ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து அலறியடித்து வெளியே ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதில் ரஞ்சித் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த ஊட்டி கக்குச்சி அஞ்சல் பகுதியை சேர்ந்த டிரைவர் தேவராஜ் (33), கூடலூர் சேரம்பாடியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் (52), அவருடைய மனைவி விஜயலட்சுமி (45), அவருடைய மகள் கவிதா (19), கூடலூர் சேரம்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (28), கூடலூர் சேரம்பாடியை சேர்ந்த சிவக்குமார் (38) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story