வெட்டுடையார் காளியம்மன் கோவில் தேரோட்டம்

வெட்டுடையார் காளியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 5:50 PM GMT (Updated: 30 March 2021 5:50 PM GMT)

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெட்டுடையார் காளியம்மன்

காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி அரியாகுறிச்சி கிராமத்தில் வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. நீதி தேவதையாக உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.

Next Story