பெண்களுக்கு பாதுகாப்பு தொடரவும், வாஷிங் மிஷின், மாதம்தோறும் ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர் கிடைத்திடவும் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்


பெண்களுக்கு பாதுகாப்பு தொடரவும், வாஷிங் மிஷின், மாதம்தோறும் ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர் கிடைத்திடவும் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்
x
தினத்தந்தி 31 March 2021 12:00 AM IST (Updated: 30 March 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு பாதுகாப்பு தொடரவும், வாஷிங் மிஷின், மாதம்தோறும் ரூ.1500, வருடத்திற்கு 6 சிலிண்டர் கிடைத்திடவும் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று மாலையில் அவரது சொந்த ஊரான சாக்கிலிப்பட்டிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டினார். மேலும் அவர் தென்பழஞ்சி, வெள்ளைப் பாரப்பட்டி, சின்னசாக்கிலிப்பட்டி பகுதியிலும் ஆதரவு திரட்டினார் அப்போது அங்கு அப்பகுதி மக்கள் திரளாக கூடி இருந்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு ஆளுயர மாலை அணிவித்தும். வாசனை மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும், கரவொலி எழுப்பியும் மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

இதனையடுத்துராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அவனியாபுரம் பகுதியில் வீதி வீதியாக, தெருத்தெருவாக சென்று தனக்கு இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு கூறி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்த பகுதியில் பெரும்பாலான வீடுகள் முன்பு பெண்கள் இரட்டை இலை மாக்கோலம் போட்டு எங்கள் ஓட்டு இரட்டைஇலைக்கே என்று உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

வரவேற்பை பெற்றுக்கொண்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தன் முன்புதிரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

அவர் பேசியதாவது, கடந்த பத்தாண்டுகளாக அம்மாவின் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கியது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தமிழகமே இருளில் மூழ்கியது.ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம்கூட மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. எப்போது எப்போது கரண்ட் வரும்? எப்போது கரண்ட் போகும் என்பதே தெரியாத நிலையில் மக்கள் கஷ்டப்பட்டார்கள். அந்த நிலையை ஒரு காலத்திலும் மறக்க முடியாது.

பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய ஒரே அரசாக அம்மா ஆட்சி இருந் தது. அம்மா மறைவிற்கு பிறகுதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 4 ஆண்டுகளாக மக்களுக்கான ஆட்சியை நடத்தினார் மக்கள் நினைக்கிறதை நிறைவேற்றினார். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்அம்மா

ஆட்சி மலர வேண்டும்.குடும்பத் தலைவிக்கு மாதம், மாதம் ஆயிரத்து 500 ரூபாய்கிடைத்திடவும், ஒருஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கிடைத்திடவும்,கேபிள் இணைப்பு இலவசமாக பெற்றிடவும, விலையில்லாவாஷிங் மெஷின்பெற்றிட தாய்மார்கள், அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story