சூளகிரி அருகே கால்நடைகளுடன் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்


சூளகிரி அருகே கால்நடைகளுடன் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 11:30 PM IST (Updated: 30 March 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கால்நடைகளுடன் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள கொட்டாயூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு நீண்டகாலமாக வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், தங்களின் ஆடு, மாடுகளுடன் ஊரின் நடுவே திரண்டு வந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story