பெண்கள் குழந்தைகள் குண்டம் இறங்கி வழிபாடு


பெண்கள் குழந்தைகள் குண்டம் இறங்கி வழிபாடு
x
தினத்தந்தி 30 March 2021 11:33 PM IST (Updated: 30 March 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கி வழிபட்டனர். 

குண்டம் திருவிழா 

கோத்தகிரி கடை வீதியில் பழமை வாய்ந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் விரதம் இருந்து பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு நடைபெற்றது. 

பெண்கள், குழந்தைகள் 

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பால்குடங்களை தங்கள் தலையில் சுமந்தவாறு, பூ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். 

அதுபோன்று குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்களும் பூ குண்டம் இறங்கினர்.  பின்னர் பிற்பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

தேர்த்திருவிழா 

தொடர்ந்து தேர்த்திருவிழா புதன்கிழமை நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு அபிஷேக பூஜையும், 12 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. 

மாலை 6 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் இழுக்க, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருந்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. 


Next Story