தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2021 11:49 PM IST (Updated: 30 March 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம்
 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா கொத்த கோட்டை பகுதியைச்சேர்ந்த வடிவேல் மகன் குமரேசன்வயது 31 இவர் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடு புரத்தில், உள்ள தனியார் நூற்பாலையில்  கடந்த 1  வருடங்களாக அங்குள்ள விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு வேலை முடிந்து போனவர். நேற்றுகாலை மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை, இவர் ஷிப்ட்  முறை மாற்றி விடவேண்டிய தொழிலாளி, இவர் வராததால், விசாரிக்க விடுதிக்குச்சென்று உள்ளார். கதவு பூட்டி இருந்ததால் கதவை தட்டியுள்ளார். அப்போதும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்த போது, விடுதியின் கூரையில் உள்ள இரும்புக்கம்பியில், தூக்குப்போட்ட நிலையில் குமரேசன் தொங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து குமரேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த குமரேசனுக்கு சங்கீதா27 என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளனர்.

Next Story