கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளது, கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்


கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளது,  கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
x
தினத்தந்தி 31 March 2021 12:07 AM IST (Updated: 31 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போனமான அளவு இருப்பு உள்ளது என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போனமான அளவு இருப்பு உள்ளது என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார். 

ெகாரோனா தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழக அரசின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக மருத்துவத் துறையினர் மற்றும் இரண்டாம் கட்டமாக முன் கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட விரும்பும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 6200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அரசு உத்தரவிற்கிணங்க 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை இணை நோய் உள்ளோர் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 500 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக போடப்பட்டுள்ளது. 

போதுமான அளவு இருப்பு

கொரோனா தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்டத்தின் மண்டல தடுப்பூசிகளின் தொகுப்பிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பெறப்பட்டு இந்த தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாலாஜா தலைமை மருத்துவமனை, ஆற்காடு, சோளிங்கர், கலவை மற்றும் அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், திமிரி, புதுப்பாடி, புன்னை, லாலாப்பேட்டை, மூதூர் மற்றும் பாணாவரம் ஆகிய 6 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் விளாப்பாக்கம், வளையாத்தூர், மாம்பாக்கம், அருங்குன்றம், மேல்விஷாரம், லாடவரம், அரும்பாக்கம், அரிகிலாபாடி, நாகவேடு, பனப்பாக்கம், மேல்களத்தூர், நவ்லாக், முசிறி, அம்மூர், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம், புதுப்பட்டு, தக்கோலம், பெருமூச்சி, மின்னல், குருவராஜபேட்டை, கொடைகல், கரடிகுப்பம், வெங்குப்பட்டு ஆகிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஏனைய நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிைலயங்களில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 
பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொரோனா தொற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

முககவசம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் உள்ள வியாபார நிறுவனங்களில் அபராதம் விதிக்க ஒவ்வொரு வட்டாரத்திலும் துறை வாரியாக சிறப்பு குழுக்கள் சுகாதார துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சேர்ந்த அலுவலர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளளது. விதிமீறல் நடைபெறும் இடங்களில் அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

Next Story