பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பரமக்குடி
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கி நடந்தது. அதையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக பால்குட திருவிழா நேற்று நடந்தது. அதிகாலையிலிருந்தே ஏராளமானோர் தங்கள் நேர்த்திக்கடனாக வைகை ஆற்றில் இருந்து பால்குடங்களை தலையில் சுமந்து வந்து முத்தாலம்மன் கோவிலில் செலுத்தினர். மேலும் ஆண்களும், பெண்களும், வேல் குத்தி பக்தி பரவசத்துடன் ஆடி வந்தனர். ஆயிர வைசிய இளைஞர் சங்கம், சமூக நலச் சங்கம், ஆச்சாரியார்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வந்தனர். பின்பு அந்த பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
Related Tags :
Next Story