பங்குனி திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு


பங்குனி திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 31 March 2021 12:09 AM IST (Updated: 31 March 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்

கமுதி
கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 19-ந்தேதி  கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவில் இன்று (புதன்கிழமை) அக்கினிச் சட்டி எடுத்தல் நடைபெறுகிறது. பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்துவார்கள். மேலும் ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வருவர். இவ்வாறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது இவர்களது நம்பிக்கை. திருவிழாவை காண சென்னை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். விழா ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின்முறை செய்துள்ளது.

Next Story