திருமயத்தில் குப்பைமேடாக மாறிய கருங்குளம்


திருமயத்தில் குப்பைமேடாக மாறிய கருங்குளம்
x
தினத்தந்தி 31 March 2021 12:21 AM IST (Updated: 31 March 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் உள்ள கருங்குளம் குப்பை மேடாக மாறியுள்ளது.

திருமயம், மார்ச்.31-
திருமயத்தில் உள்ள கருங்குளம் குப்பை மேடாக மாறியுள்ளது.
கருங்குளம்
திருமயத்தின் மையப்பகுதியில் கருங்குளம் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் தற்போது, குப்பைமேடாக மாறிஉள்ளது. அதுமட்டுமின்றி இந்த குளத்தில்  மனித கழிவுகள், கால்நடை கழிவுகள் கலந்து சுகாதாரகேடாக மாறி உள்ளது.
இதன்காரணமாக திருமயத்தில் உள்ள நிலத்தடி நீரும் அசுத்தப்படவாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், இந்த கருங்குளத்தை சுத்தம் செய்து பூங்கா ஆக்குவோம், நடை பயிற்சி மையம் அமைப்போம் எனவாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் சொன்னப்படி யாரும், அதனை நிறைவேற்றவில்லை.
கோரிக்கை
சுற்றுலாதலமான திருமயத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் பஸ்நிலையத்தில் இறங்கி இந்த குளத்தின் வழியாகதான் சுற்றுலாதலங்களுக்கு செல்ல வேண்டும். இந்த குளத்தை பார்த்து அவர்கள் முகம் சுழித்தவாறே செல்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் வெற்றி பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் இந்த கருங்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி பூங்கா மற்றும் நடைபாதை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story