தொழிலாளி மீது தாக்குதல்; அண்ணன்-தம்பி கைது


தொழிலாளி மீது தாக்குதல்; அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 30 March 2021 7:26 PM GMT (Updated: 30 March 2021 7:26 PM GMT)

தொழிலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

மானூர்:

மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 42) தொழிலாளி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது வீட்டின் முன்பாக அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குத்தால குமார் (26) என்பவர் மது அருந்தியுள்ளார். 

இதனை ஹரிஹரன் கண்டித்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரிஹரன் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு சென்று உள்ளார். 

தற்போது மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி குடியிருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஹரிஹரன் தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். வீட்டின் அருகே வந்த போது குத்தால குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஹரிஹரனை வழிமறித்து தாக்கியுள்ளனர். 

மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி, கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த ஹரிஹரன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார், குத்தால குமார், அவரது தம்பி குரு (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

Next Story