விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்


விக்கிரமசிங்கபுரத்தில்  தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 31 March 2021 1:12 AM IST (Updated: 31 March 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 59). இவருக்கு சொந்தமான தோட்டம் தெற்கு அகஸ்தியர்புரத்தில் இருக்கிறது.  இவரது தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மின்கம்பத்தை சாய்ந்ததுடன் சுமார் 25 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வைத்தியலிங்கம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர். சுமார் 5 யானைகள் குட்டிகளுடன் வந்து சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Next Story