முக்கூடல் அருகே சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி


முக்கூடல் அருகே  சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 March 2021 7:46 PM GMT (Updated: 30 March 2021 7:46 PM GMT)

முக்கூடல் அருகே சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முக்கூடல்:

முக்கூடல் அருகே சடையப்பபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 28-ந் தேதி கால் நாட்டுதலுடன் தீர்த்தவாரி எடுத்து வருதல், உச்சிகால பூஜை என பல்வேறு பூஜைகள் அம்மனுக்கு நடைபெற்று வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கையில் தீச்சட்டி, தீப்பந்தம் உள்ளிட்டவற்றுடன் அடுத்தடுத்து வரிசையாக பூக்குழி இறங்கினார்கள். முன்னதாக பக்தர்கள் பலர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story