தென்காசி மாவட்டத்தில் ரூ.4¼ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
தென்காசி மாவட்டத்தில் ரூ.4¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டத்தில் ரூ.4¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ரூ.3 லட்சம் பறிமுதல்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை அருகே வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜசிம்மன் தலைமையில் காவலர்கள் கணேசன், வெள்ளத்துரை, செல்லத்துரை ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சேலத்திற்கு சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனந்தல் வட்டம் மூலக்கல் வீதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் மகன் சுபாஷ் என்பவர் ரூ.3 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில். சேலத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க செல்வதாக சுபாஷ் கூறினார். அவர் சேலம் சென்று எலக்ட்ரிக்கல் பொருள் வாங்குவதற்கு உரிய போதிய ஆவணங்கள் இல்லாததால் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்
கடையநல்லூர் தொகுதி புளியரை அருகில் பறக்கும் படை அலுவலர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றினர். அதுபோல், அரசப்பன் தலைமையிலான பறக்கும் படையினர் கேரளாவில் இருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் மாடுகளை வாங்க வந்த நபரிடம் ரூ.51 ஆயிரத்து 600, வேனில் காய்கறி வாங்க வந்த நபரிடம் ரூ.54 ஆயிரத்து 500 கைப்பற்றினார்கள்.
Related Tags :
Next Story