தென்காசி கோவில்களில் பூக்குழி திருவிழா


தென்காசி கோவில்களில் பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 31 March 2021 1:30 AM IST (Updated: 31 March 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி கோவில்களில் பூக்குழி திருவிழா நடந்தது.

தென்காசி:

தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் மேல முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பூக்குழி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 250 பேர் கலந்துகொண்டு தீ மிதித்தனர். 

இதேபோன்று தென்காசி கீழ முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் 150 பக்தர்கள் தீ மிதித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story