திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா


திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 March 2021 1:37 AM IST (Updated: 31 March 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. 10 பேர், 20 பேர் பாதிப்பு என்றிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,558 ஆக உயர்ந்தது. 286 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதேநேரம் நேற்று 18 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை 15,088 பேர் பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது.

Next Story