சிவகிரி அருகே பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது


சிவகிரி அருகே பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது
x
தினத்தந்தி 31 March 2021 1:54 AM IST (Updated: 31 March 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிவகிரி அருகே பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 
பொன்காளியம்மன் கோவில்
சிவகிரி அருகே பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா கடந்த 23-ந் தேதி இரவு 9 மணி அளவில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை 6 மணி அளவில் பக்தர்கள் ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 
அந்தரத்தில் தொங்கியபடி
பக்தர் ஒருவர் ஊஞ்சலூர் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் இருந்து தன் உடலில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி சரக்கு வாகனத்தில் பொன்காளியம்மன் கோவிலை வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
இன்று (புதன்கிழமை) பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story