தர்மபுரி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பைபாஸ் ரோடு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பென்னாகரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சுரேஷ்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சுரேஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, 4 லாரிகளை வாங்கியதும், அந்த லாரிகளை நிர்வகிக்கும் பொறுப்பை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (25) என்பவரிடம் வழங்கியதும் தெரியவந்தது. அந்த லாரிகளை அபகரிக்கும் நோக்கத்துடன் அரவிந்த்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கி அதியமான்கோட்டை பைபாஸ் சாலையில் வீசி அவர் மீது காரை ஏற்றி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் உறுதியானது.
இந்த கொலை தொடர்பாக அரவிந்த்குமார் அவருடைய நண்பர்களான எல்லப்பராஜ் (21) கோவிந்தராஜ் (28), கார்த்திக் ஆகிய 4 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story