வடமாநில பெண் சாவு
கரூரில் வடமாநில பெண் உயிரிழந்தார்.
கரூர்
மேற்குவங்காள மாநிலம் சோட்டா மல்லிகை பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் மண்டல். இவருக்கு சுமித்ரா மண்டல் (வயது 27) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் பசுபதிபாளையம் பகுதிக்கு உட்பட்ட துளிப்பட்டி அருகே உள்ள செல்வ நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அங்குள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கணவன்-மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் அவர்கள் மது குடித்தனர். சிறிது நேரத்தில் சுமித்ரா மண்டல் வாந்தி எடுத்து மயங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சுமித்ரா மண்டல் பேச்சு, மூச்சின்றி கிடந்தார். அவரை, காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுதீஷ் மண்டல் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story