தேர்தல் பிரசாரத்துக்கு தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்த முகிலன் கைது
தேர்தல் பிரசாரத்துக்கு தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்த முகிலனை போலீசார் கைது செய்தனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்த முகிலனை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்
சென்னிமலை காங்கேயம் ரோட்டில் வசித்து வருபவர் முகிலன். இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். சமூக ஆர்வலரான முகிலன் ஏற்கனவே கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். கூடங்குளத்தில் அரசு தொடர்ந்து அணு உலைகளை கட்டக்கூடாது. வேளாண் சட்டங்கள் மற்றும் புதிய மின்சார சட்டங்களை கொண்டு வரக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறார்.
கைது
இந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட போவதாக முகிலன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர் நேற்று காலை 8.15 மணி அளவில் தனது வீட்டில் இருந்து கருப்புக்கொடியுடன் வெளியே செல்ல முயன்றார்.
இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகிலனை கைது செய்தனர். அப்போது முகிலன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். பின்னர் முகிலனை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மாலையில் அவரை விடுதலை செய்தனர்.
Related Tags :
Next Story