வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 31 March 2021 2:18 AM IST (Updated: 31 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருடப்பட்டது.

நொய்யல்
நொய்யல் அருகே சொட்டையூர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 32). இவர் புகளூர் காகித ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது. வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினேஷின் தாத்தா வெங்கடாசலம் முத்தனூரில் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சிக்கு கணவன்-மனைவி இருவரும் வீ்ட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். அப்போது தினேசின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் வீட்டுக்கு விரைந்து வந்த தினேஷ் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story