பயிற்சி முகாம்
ஆலங்குளத்தில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆலங்குளம் சமுதாய கூடத்தில் வான்முகில் அமைப்பின் சார்பில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வான்முகில் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் பாண்டியன், பேராசிரியை சாந்தி ஆகியோர் கிராமப்புற தொழிலாளர் நல குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிபற்றி பேசினர். இதில் ராசாப்பட்டி செவல்பட்டி, கீழாண் மறைநாடு உள்பட 10 கிராமங்களிலிருந்து நல வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வான்முகில் ஒருங்கிணைப்பாளர் முனியராஜ் மற்றும் சந்திர கலா இந்திராணி, செல்வி, கற்பகவல்லி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story