100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி


100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 31 March 2021 2:24 AM IST (Updated: 31 March 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

தளவாய்புரம்,
தளவாய்புரத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். 
விழிப்புணர்வு பேரணி 
வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி 36 பஞ்சாயத்துகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தளவாய்புரத்தில் நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 
அப்போது பெண்கள் விழிப்புணர்வு ரங்கோலி கோலம் இட்டு கோலாட்டம் நடத்தினர். மேலும் ஆண்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. சுய உதவிக்குழு பெண்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதையடுத்து சிறுமிகளின் பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 
துண்டு பிரசுரம் 
இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பின்னர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தளவாய்புரம் பஸ்நிலையம் வரை நடந்து சென்று பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கல்யாணகுமார், தாசில்தார் ஸ்ரீதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றி வேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சத்தியவதி, சோழபுரம் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துப்புரவு சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story