வாங்கல் போலீஸ் நிலையத்தில் சுய உதவிக்குழுவினர் குவிந்ததால் பரபரப்பு
வாங்கல் போலீஸ் நிலையத்தில் சுய உதவிக்குழுவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவர்கள் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஏஜெண்ட் மூலம் கடன் பெற்றுள்ளனர். மகளிர் குழுவினர் தாங்கள் வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ஏஜெண்டிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஏஜெண்ட் தவணையை வங்கியில் முறையாக செலுத்தாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றும், ஆகவே தவணை தாகையை திருப்பி செலுத்துமாறு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் குழுவினர் வாங்கல் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வங்கியில் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கான தவணையை ஏஜெண்டிடம் கொடுத்து விட்டோம். அவர் செலுத்தவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது தற்போது வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வாங்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story