டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து


டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து
x
தினத்தந்தி 31 March 2021 2:33 AM IST (Updated: 31 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை அருகே தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
புகளூர் அருகே கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுபான கடை அருகே குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. செடி கொடிகளும் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் அங்குள்ள குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Next Story