விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 March 2021 2:51 AM IST (Updated: 31 March 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கண்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணியாளர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்ன வடிவில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் உறிஞ்சுக்குழிகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ராஜபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாணகுமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், திருநாவுக்கரசி, குன்னூர் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story