தலைவாசலில் விற்பனையாளரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்


தலைவாசலில்  விற்பனையாளரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 31 March 2021 4:49 AM IST (Updated: 31 March 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

விற்பனையாளரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்

தலைவாசல்:
தலைவாசல் ஒன்றிய அலுவலகம் அருகில் மும்முடி-வீரகனூர் மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி, ஏட்டு செல்வி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தலைவாசலை சேர்ந்த தனியார் உணவு பொருட்கள் விற்பனை நிறுவன வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனை வீரகனூரை சேர்ந்த விற்பனையாளர் விஜயன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து வேனில் அதிகாரிகள் சோதனை செய்த போது, விஜயனிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதனிடம் ஒப்படைத்தனர்.

Next Story