வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு


வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 7:43 AM IST (Updated: 31 March 2021 7:43 AM IST)
t-max-icont-min-icon

எளியாஸ் கடை பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பெருங்கரைபகுதியில் காட்டுயானை 2 பேரை தாக்கி கொன்றது. 

இந்த நிலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா என்று கும்கி யானை பொம்மன் உதவியுடன் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் பெருங்கரை, எளியாஸ்கடை உள்பட பல்வேறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது காட்டு யானைகள் அங்கு எதுவும் தென்படவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story