மணப்பாறை தொகுதியில் உதயசூரியனுக்கு வாக்களித்து மாற்றத்தை தாருங்கள் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு பிரசாரம்
தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மணப்பாறை தொகுதி முழுவதும் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மணப்பாறை தொகுதி முழுவதும் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அப்துல் சமதுவிற்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை தரவேண்டும்.
இந்த முறை தி.மு.க. ஆட்சிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே மணப்பாறை தொகுதியில் மாற்றம் வேண்டும். அதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றதும் மணப்பாறை தொகுதியில் பல மகத்தான திட்டங்கள் கழக ஆட்சியிலே கொண்டு வரப்படும். கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து விட்டு ஏதும் செய்யாமல் இப்போது அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அ.தி.மு.க. கூறி வருவதை இனியும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இந்த ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். ஆகவே தான் மணப்பாறை தொகுதிக் கும் மாற்றம் வேண்டும். அதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story