மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் திருவெறும்பூர் அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் பேச்சு
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் போட்டியிடுகிறார்.
திருச்சி,
சாலை வசதி செய்து கொடுத்த அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் பேசினார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது திறந்த ஜீப்பில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று திருவெறும்பூர் வீதிவடங்கம், 64-வது வார்டு முழுவதும் மற்றும் 30-வது வார்டில் உள்ள ரெயில்வே காலனி பகுதிகள், தங்கேஸ்வரி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, குறிஞ்சி நகர் மூகாம்பிகை நகர் பகுதிகளில் ஜீப்பிலிருந்து இறங்கி தெரு தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு அந்த பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் ப.குமார் பேசும்போது பொன்மலை மற்றும் பொன்மலைப்பட்டி இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தார் சாலை இணைப்பு வசதி வேண்டும் என்பதுதான். அந்த கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. அரசு நிறை வேற்றியது. உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் நான் அந்த கோரிக்கையை எடுத்து சென்று திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஐ.டி. அருகிலிருந்து கல்கண்டார் கோட்டை வரை தார்சாலை அமைத்து கொடுக்கப் பட்டுள்ளது. இந்த சாலையினால் அம்பிகாபுரம் உள்பட ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
இதுபோன்ற உங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த அரசுக்கு ஆதரவாக இருங்கள். இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார். வேட்பாளருடன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கும்பக்குடி கோவிந்த ராஜ், பகுதி செயலாளர்கள் பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், பாலசுப்ரமணியன், வட்டச் செயலாளர்கள் ராஜா, சிவ முருகானந்தம், ராகவன் தேசிங்கு ராஜா, வக்கீல் பாஸ்கர் உள்பட ஏராள மானவர்கள் சென்றனர்.
Related Tags :
Next Story