நீலகிரியில் ரூ6¾ லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற நீலகிரியில் ரூ.6¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 800, குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 750 என மொத்தம் ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் 3 தொகுதிகளில் இதுவரை ரூ.2 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 330 பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story