ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து வாழைகளை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.
கூடலூர்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து வாழைகளை நாசப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது.
காட்டு யானைகள் அட்டகாசம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டுயானைகள் ஓடக்கொல்லி பகுதிக்குள் புகுந்தது.
பின்னர் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு புகுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நடவடிக்கை இல்லை
அதுபோன்று நெலாக்கோட்டை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த 5 காட்டு யானைகள் சசக்ஸ் பகுதியில் முகாமிட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
அதுபோன்று கூடலூர் அருகே உள்ள கெவிப்பாரா, நாடுகாணி, தேவாலா பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது.
இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story