மளிகை கடையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் நகை பறிப்பு


மளிகை கடையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 5:35 AM GMT (Updated: 31 March 2021 5:35 AM GMT)

மளிகை கடையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரித்தா (வயது 47). 

இவர்  கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி ஒருவர் கடையில் பொருள் வாங்கினார்.

 அப்போது அந்த ஆசாமி திடீரென்று பிரித்தா கழுத்தில் கிடந்த 3¾ பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.  

இது குறித்த புகாரின்பேரில் அம்பலமூலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story