ரசீது இல்லாமல் வேளாண் இடுபொருட்கள் வாங்க கூடாது


விவசாயம்
x
விவசாயம்
தினத்தந்தி 31 March 2021 11:06 AM IST (Updated: 31 March 2021 11:06 AM IST)
t-max-icont-min-icon

ரசீது இல்லாமல் வேளாண் இடுபொருட்கள் வாங்க கூடாது

சுல்தான்பேட்டை


சுல்தான்பேட்டை வட்டாரத்தில்விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, 50 லட்சத்துக்கும் மேல் தென்னைமரங்கள் உள்ளன. 

பல ஆயிரக்கணக்கானஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர்கள், சின்னவெங்காயம், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.  சமீபத்தில் பெய்த கோடை மழை மற்றும் பி.ஏ.பி.பாசன நீரைக் கொண்டு பயிர்சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர். 

 சுல்தான் பேட்டை வட்டாரவேளாண் அதிகாரிகள் குருசாமி, ரமேஷ் ஆகியோர் கூறியதாவது

உரிமம் பெறாத உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதை விவசாயிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தரமற்ற வேளாண் இடுபொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உரிமம் பெற்ற கடையில்விதை, உரம், பூச்சிகொல்லிமருந்து வாங்கும்போதுகட்டாயம் ரசீது பெறவேண்டும். காலாவதி தேதியும் பார்த்துவாங்கவேண்டும். 

தோட்டங்களுக்கே வந்து விற்பனையாளர்கள் உரம் விற்பனை செய்தாலும், தங்கள் பகுதிவேளாண் அலுவலர் உடன் விவசாயிகள் கலந்துஆலோசிக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள்  கூறினார்கள்.

Next Story