மின்கம்பி உரசியதில் தேங்காய் மட்டை ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
நல்லம்பள்ளி அருகே மின் கம்பி உரசியதில் தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மின் கம்பி உரசியதில் தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
மின் கம்பி உரசியது
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டிக்கு வந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம் கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் மாதையன் ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 23) கிளீனராக உடனிருந்தார்.
நல்லம்பள்ளி அருகே ஊத்துப்பள்ளம் கிராமத்தில் லாரி சென்ற போது, முத்தம்பட்டி சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் லாரியில் ஏற்றி சென்ற தேங்காய் மட்டை உரசியது. இதில் தேங்காய் மட்டையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியது.
எரிந்து சேதம்
இதுகுறித்து கிராம மக்கள் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் லாரியை நிறுத்தி விட்டு தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்கு முன்பே தேங்காய் மட்டையுடன் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story