அதியமான்கோட்டை சுயம்பு காளியம்மன் கோவிலில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
அதியமான்கோட்டை சுயம்பு காளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டையில் சுயம்பு காளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பபூஜை, அம்மனுக்கு பால் அபிஷேகம், கோபூஜை, விநாயகர் தேர் இழுத்தல் மற்றும் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பெரிய தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் மீது பக்தர்கள் உப்பை தூவினர். இன்று (புதன்கிழமை) பெரிய தேர் நிலை அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 7-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஸ்ரீ அம்மன் ஊர்வலத்துடன் திருவிழா நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story