சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு போடும் ஓட்டு பா.ஜனதாவிற்கு போடும் ஓட்டிற்கு சமம்
சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு போடும் ஓட்டு பா.ஜனதாவிற்கு போடும் ஓட்டிற்கு சமம் என்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
கோவை
சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு போடும் ஓட்டு பா.ஜனதாவிற்கு போடும் ஓட்டிற்கு சமம் என்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
பொதுக்கூட்டம்
கோவை கணபதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு கொண்டு பேசியதாவது:- மத்திய பா.ஜனதா அரசு விமானம், ரெயில்வே என அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது.
பா.ஜனதாவின் கட்டளைகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பட்டு நடக்கிறது. எனவே அ.தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை மீட்க வாக்காளர்கள் தேர்தலை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மதத்தின் பெயரால் பிளவு
வட மாநிலங்களில் பா.ஜனதா அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினர், தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் மதத்தின் பெயரால் அங்கு மக்களை பிளவுபடுத்தி வைத்து உள்ளனர்.
அதேபோல் தமிழகத்திலும் மக்களை பிளவுப்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது. எனவே அ.தி.மு.க.விற்கு அளிக்கும் ஓட்டு, பா.ஜனதாவிற்கு அளிக்கும் ஒட்டுக்கு சமம்
கடந்த 2019-ம் ஆண்டு சம்பள சட்டத் தொகுப்பையும், அதைத்தொடர்ந்து 3 தொழிலாளர் விரோத சட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை இழக்கின்றனர்.
எனவே இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்), வ.ம.சண்முகசுந்தரம் (தி.மு.க.), பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் மற்றும் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story