சைதை துரைசாமி வீடு வீடாக வாக்கு கேட்டு பிரசாரம்..
அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி கோட்டூர்புரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களின் மத்தியில் போட்டி தேர்வுகளை பற்றியும், அதற்கு அரசு பயிற்சி மையங்கள் அமைக்க கழகத் தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை விளக்கியும் இளைஞர்களிடம் ஆதரவு திரட்டினார்.
சென்னை சைதாப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவர் பிரசார வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து காட்டிலும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்திப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கோட்டூர்புரம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று கிறிஸ்தவர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
மேலும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார், தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது அவர் மீது பூக்களைத் தூவி பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அங்குள்ள இளைஞர்களிடம் போட்டி தேர்வு குறித்தும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் போட்டித் தேர்வுக்கு அரசு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துக்கூறி சைதை துரைசாமி வாக்கு சேகரித்தார்.
மேலும் அப்பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறி தனக்கு ஆதரவு திரட்டினார். சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அமைந்து உள்ள தேரடி தெருவில் வாக்கு சேகரித்த போது சாலையோர உணவகத்தில் தோசை சுட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், சைதை துரைசாமிசாமியிடம் வந்து என் மகனின் படிப்பு செலவுக்கு நீங்கள்தான் உதவினீர்கள், என்னுடைய கடையில் வந்து ஒருமுறை சாப்பிட வேண்டும் என்று நன்றிப் பெருக்கோடு கேட்டுக்கொண்டார், சைதை துரைசாமியும் கடைக்குச் சென்று தோசை சுட்டு தொண்டர்களுக்கு வழங்கி, தானும் சாப்பிட்டார்.
பிரச்சாரத்தின்போது அவரிடம் பலர், நீங்கள் செய்துவரும் கல்வி சேவை மிகப்பெரிய சேவை, தானத்தில் சிறந்தது கல்விசேவை, அந்த சேவையை நீங்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறீர்கள், எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என்று உறுதிபட தெரிவித்தனர்.
Related Tags :
Next Story